(தோழர் தியாகு எழுதுகிறார்  149 : அஞ்சலட்டை தொடர்ச்சி) கீழடியும் தென்முடியனூரும் மதுரையிலிருந்து  12 அயிரைப்பேரடி(கிலோமீட்டர்) தென்கிழக்கே சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் இரண்டு காணி(ஏக்கர்) பரப்பளவில் 18.3 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க. தாலின் திறந்து வைத்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் தென்முடியனூரில் பட்டியலின மக்கள் கோயிலில் நுழைந்த பின்னர் சாதி இந்துக்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அகழ் வைப்பகம் எனப்படும் இந்த அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆறு காட்சிக் கூடங்களில் பழங்கால மனிதர்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் வகையிலான ஓவியங்கள், வைகைக் கரையில் வாழ்ந்த மக்களின் வேளாண்மை, நீர் மேலாண்மை…