தமிழ் ஒருங்குகுறியில் மீண்டும் ஏற்படுத்தப்படும் குழப்பம்! -முனைவர் மா.பூங்குன்றன்
உலகெங்கும் பேசப்படும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகளுக்கும் தனித்தனி எழுத்தமைப்புகள் உண்டு. ஒரு மொழியில் அமைந்துள்ள சில சிறப்பு எழுத்துகள் பிறவற்றில் இருக்கா. மொழி, ஒலி வடிவை அடிப்படையாகக் கொண்டது. அம் மொழியில் உள்ள ஓர் அலகைத் தனியாகப் பிரித்து அந்த அலகிற்கு ஓர் எழுத்து என்று வகைப்படுத்தி, அதற்கு வரிவடிவம் கொடுத்தனர். ஒலி வடிவத்திற்கு வரிவடிவம் கொடுத்தது மொழியியல் உலகில் மிகப்பெரிய திருப்புமுனையாகும். தமிழ் மொழியின் எழுத்து வடிவத்திற்கு மிக நீண்டகால வரலாறு உண்டு. தமிழ் எழுத்துகள் கீறப்பட்ட பானையோடுகள் தொல்லியல் அகழ்வாய்வுகளில் கிடைக்கின்றன….