திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 052. தெரிந்து வினை ஆடல்
(அதிகாரம் 051. தெரிந்து தெளிதல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 052. தெரிந்து வினை ஆடல் பணியில் அமர்த்தியபின், அவர்அவர் திறன்கள் அறிந்து, கையாளுதல் 0511 .நன்மையும், தீமையும், நாடி, நலம்புரிந்த தன்மையால், ஆளப் படும். நன்மை, தீமைகளை, ஆராய்க; நன்மையரைப் பணியில் அமர்த்துக. வாரி பெருக்கி, வளப்படுத்(து), உற்றவை ஆராய்வான், செய்க வினை. வருவாய் பெருக்கி, வளப்படுத்திப், பயன்கள் ஆய்வான் செயற்படுக. அன்(பு),அறிவு, தேற்றம், அவாஇன்மை, இந்நான்கும், நன்(கு)உடையான் கட்டே,…