கூத்துப்பட்டறை ந.முத்துசாமி காலமானார்.
கூத்துப்பட்டறை ந.முத்துசாமி காலமானார். (வைகாசி 12, தி.பி. 1967/ 25.05.1936 – ஐப்பசி 07, தி.பி. 2049 / 24.10.2018) தஞ்சை மாவட்டம் புஞ்சை என்னும் சிற்றூரில் பிறந்து கலைப்பணிகளால் புகழ் பெற்ற கூத்துப்பட்டறை நிறுவனர், ந,முத்துசாமி உடல்நலக்குறைவால் இன்று (24.10.2018) காலமானார். சிறுகதை எழுத்தாளராக இருந்த இவர் 1968 இல் நாடக வளர்ச்சிக்கு எனத் தன் வாழ்வை ஒப்படைத்தார். ‘கூத்துப்பட்டறை‘ என்னும் கலைவளர் அமைப்பு 1977ஆம் ஆண்டு இவரால் தொடங்கப்பட்டது. இந்திய அரசின் பண்பாட்டுத்துறை அமைச்சகம், ஐ.நா.வின் கல்விஅறிவியல்-பண்பாட்டு(UNESCO) அமைப்பு, ஃபோர்டு…