பிரபாகரன் சிலையிடிப்பு : கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் – வைகோ
பிரபாகரன் சிலையை இடித்துத் தகர்த்ததைக் கண்டித்து, 9 ஆம் நாள் நாகையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்! தமிழகம் முழுமையும் பிரபாகரன் சிலை எழும்; எந்த ஆற்றலாலும் தடுக்க முடியாது! வைகோ அறிக்கை! தமிழ்க்குலத்தின் தவமைந்தன், தரணியில் தமிழ் இனத்திற்கு அடையாளத்தை- முகவரியை நிலைநாட்டிய வரலாற்று நாயகன், நான் உயிரினும் மேலாக நேசிக்கும் தலைவர் பிரபாகரன் அவர்களின் உருவச் சிலையை, நாகை மாவட்டத்தில் தெற்குப் பொய்கை நல்லூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வாழும் தமிழ் மக்கள், தாங்கள் வழிபடும் ஐயனார் கோவில் வளாகத்தில் வெள்ளைப் புரவியின்…
பிரபாகரன் சிலை அகற்றம்: மரு.இராமதாசு கண்டனம்! மாணவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை!
தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் பிரபாகரன் சிலை நல்லூரில் அகற்றம்: மரு.இராமதாசு கண்டனம்! போராட்டம் வெடிக்கும் எனத் தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை! பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்:– நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த தெற்குப் பொய்கை நல்லூரிலுள்ள கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ஈழப்போராளி பிரபாகரனின் உருவச்சிலையை காவல் துறையினர் இரவோடு இரவாக அகற்றியிருக்கின்றனர். அந்த ஊரில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு பிரபாகரன் சிலையை மட்டும் அகற்றியுள்ளனர். குதிரை சிலை மட்டும் இருக்கும் நிலையில், பிரபாகரன் சிலை…