உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் – ப. மருதநாயகம்
(உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 2/5 தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் பின்னிணைப்பு உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 3/5 5. விபுலானந்த அடிகளார் ஐந்தாம் கட்டுரை விபுலானந்த அடிகளார் குறித்தது. “யாழ்நூல் கண்ட விபுலானந்தர் தமிழிசைக்கு மட்டுமின்றி, தமிழியலின் பல்வேறு துறைகளுக்கும் பெரும்பங்களிப்பைச் செய்துள்ளார். “படைப்பிலக்கியக்காரராக, திறனாய்வாளராக, மொழியியல் வல்லுநராக, கலைவரலாற்று ஆசிரியராக, கவிஞராக, தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்த்தவராக, தமிழினப் பாதுகாவலராக, இதழியலாளராக, அறிவியல், சமயம், தத்துவம், வரலாறு ஆகிய துறைகளில் புததொளி தந்தவராக, அவர் செய்துள்ள…