தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌‌ொ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌ை) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌‌ொ)  தெ.பொ.மீ. மதுரைப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானதும் ‘தமிழக வரலாறும் பண்பாடும்’ என்னும் பாடத்தை நீக்கி விட்டு ‘இக்கால இலக்கியம்’ என்பதைக் கொணர்ந்தார். இக்கால இலக்கியம் என்னும் போர்வையில் கொச்சைத் தமிழ்நடைகள் உடைய படைப்புகள் கோலோச்சுகின்றன. இதனால் தமிழுக்கு மேலும் கேடுகள்தாம் விளைகின்றன. எழுத்து மொழியை வலியுறுத்திய பேராசிரியர் இலக்குவனாரின் கருத்துகளில் ஒன்றைக் காண்போம். “இன்று நம்மில் சிலர், ‘ மொழியின் உயிர் வழக்கு மொழியில்தான் உள்ளது. வழக்கு மொழியேதான் எழுத்து மொழியாகவும் கொள்ளப்படல் வேண்டும்…

உவகைதரும் உரையாசிரியர்களின் நடை – தெ.பொ.மீ.

உவகைதரும் உரையாசிரியர்களின் நடை   இறையனார் அகப்பொருள் உரை ஒரு சிறந்த உரைநடைநூல். சூத்திரத்திற்குப் பொருள் கூறுவதோடு சோலை முதலியவற்றைப் பற்றிய புனைந்துரையும் அன்பு முதலியவை பற்றிய தத்துவ விளக்கமும் அங்கு உண்டு. ஆனால், அங்குப் பாட்டு நடை காதில் கேட்காமல் இல்லை. எதுகை மோனைகள் அளவுக்கு மீறி இன்பமூட்டுகின்றன…   தொல்காப்பியத்தின் முதல் உரையாசிரியரான இளம்பூரணரின் நடை எளிமை வாய்ந்தது. சேனாவரையரின் இலக்கணவுரையில் புனைந்து கூற மிகுந்த இடம் இல்லையாயினும் அவரது நடையில் மிகுந்த பொலிவும் புனைவும் இடம்பெறுகின்றன. திருக்குறள் உரையாசிரியரான பரிமேலழகர்…