திருவரங்கம் வாக்காளர்களை ‘மக்கள் நல்வாழ்வு இணையம்’ அழைக்கிறது
நேர்மையும் நாட்டுப்பற்றும் மிக்க நண்பர்களே! வணக்கம் இந்திய/தமிழக அரசியலில் நேர்மைக்கு இடமளிக்க வேண்டிய தருணமிது .இதில் நாம் தவறுவோமானால் எதிர் காலப் பரம்பரையினர்க்கு நேர்மை என்ற சொல்லே தெரியாமல் அழிந்துவிடும் .நமது இன்றைய அரசியல்வாதிகள் வெள்ளைக்காரர்களே வெட்கப்படும்படி எந்த அளவுக்கு நாட்டைச் சுரண்டி வருகிறார்கள் என்பதை நாடே அறியும் . அவர்களிடமிருந்து நாட்டை மீட்க வேண்டியது இரண்டாவது விடுதலைப்போராட்டத்துக்கு ஒப்பானது .இதற்கு ஒரு காந்தி பிறக்க மாட்டார்;- நாம் தான் செய்யவேண்டும். இதை உணர்ந்த ஊழலை எதிர்க்கும் நேர்மையாளர்களின் கூட்டமைப்பு…