கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இரா.மோகன்

    கவிமணி – தமிழ்க் கவிதைக் கண்மணி: இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகில் தடம் பதித்த கவிஞர்கள் நால்வர். இவர்கள் ஒவ்வொருவாருக்கும் தனிச்சிறப்பு உண்டு. நால்வருள் மோனையைப் போல் முன்னிற்பவர் பாரதியார். இவர் 39 ஆண்டுகளே வாழ்ந்து கவிதை உலகில் சாதனை படைத்தவர். பாரதியாருக்கு அடுத்த நிலையில் புகழ் பெற்று விளங்கியவர் பாரதிதாசன்; பாரதியாருக்கு ஒன்பது ஆண்டுகள் இளையவரான இவர் 73 ஆண்டுகள் வரை வாழ்ந்தவர்.    கவிமணி சி.தேசிக விநாயகம் (பிள்ளை) (1876–1954) பாரதியாரை விட ஆறு ஆண்டு மூத்தவர்….

இறைவனை எங்கும் கண்டிலனே – கவிமணி

தெப்பக் குளங் கண்டேன் – சுற்றித் தேரோடும் வீதி கண்டேன் எய்ப்பில் வைப்பா மவனைத் – தோழி ஏழை நான் கண்டிலனே சிற்பச் சிலைகள் கண்டேன் – நல்ல சித்திர வேலை கண்டேன் அற்புத மூர்த்தி யினைத் – தோழி அங்கெங்குங் கண்டிலனே பொன்னும் மணியுங் கண்டேன் – வாசம் பொங்கு பூ மாலை கண்டேன் என்னப்பன் எம்பி ரானைத் – தோழி இன்னும் யான் கண்டிலனே தூப மிடுதல் கண்டேன் – தீபம் சுற்றி எடுத்தல் கண்டேன் ஆபத்தில் காப்பவனைத் – தோழி…

ஒற்றுமையே உயர்நிலை – கவிமணி

                ஒற்றுமையாக உழைத்திடுவோம் – நாட்டில்      உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்; வெற்றுரை பேசித் திரிய வேண்டாம் – இன்னும்      வீணாய்ப் புராணம் விரிக்க வேண்டாம்.                 கூடி விருந்துண்ண வேண்டவில்லை – பெண்ணைக்      கொண்டு கொடுக்கவும் வேண்டவில்லை; நாடி எவரொடும் நட்பினராய்த் – தேச      நன்மைக் குழைப்பதில் நட்டம் உண்டோ?                    கீரியும் பாம்புமாய்ச் சண்டையிட்டு – சாதி      கீழென்றும் மேலென்றும் நாட்டிவிட்டு, பாரதத் தாய்பெற்ற மக்கள் என்று – நிதம்      பல்லவி பாடிப் பயன்…