ஊர்கள் தோறும் தமிழ்ப்பள்ளி தேவை! – பாரதியார்
ஊர்கள் தோறும் தமிழ்ப்பள்ளி தேவை! அனாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கள். “கான்பரென்சு’ என்றும் “மீட்டிங்’ என்றும் கூட்டங்கள் கூடிவிடிய விடிய வார்த்தைகள் சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமலிருக்கிறார்களே! பாரதியார்: தேசியக் கல்வி (கனடாவில் பாரதி தமிழ்க்கல்வி தொடக்க விழாவில் எடுக்கப்பட்ட படம், தினகரன், 24.07.15)
தமிழில் தேசியக் கல்வி – பாரதியார்
தமிழில் தேசியக் கல்வி தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவகாரங்களும் தமிழ் மொழியில் நடத்த வேண்டுமென்பது பொருள். ஆரம்ப விளம்பரம் தமிழில் பிரசுரம் செய்யப்பட வேண்டும் பாடசாலைகள் தாபிக்கப்பட்டால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவதுமின்றி பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலேயே பெயர் சொல்ல வேண்டும். ‘ஃச்லேட்டு’, ‘பென்சில்’ என்று சொல்லக் கூடாது. பாரதியார் : ஞானபாநு, செப்டம்பர் 1915