குறள்… அன்பின், அறம்பாடியது   மறம்பாடியது ஆனால், எந்தமதத்தைப்பற்றியும் புறம்பாடவில்லை! ஆதலால் தயங்காமல்சொல்வோம் திருக்குறளே தேசியநூல்! குறள்… வாழ, பொருள்செய்யும்வழிதந்தது வாழ்க்கை, பொருள்படநெறிதந்தது ஒருக்காலும் வாழ்வில், மருள்படரவரிதந்ததில்லை ஆதலால் தயங்காமல்சொல்வோம் திருக்குறளே தேசியநூல்! குறள்… காதலின், இன்பம் சொன்னது காத்திருக்கும், துன்பம்சொன்னது கிஞ்சித்தும் காமம்தூண்டி, வன்மம்சொன்னதில்லை ஆதலால் தயங்காமல்சொல்வோம் திருக்குறளே தேசியநூல்! தஞ்சாவூரான் துபை. ஐக்கிய அரபு அமீரகம் +971 55 79 88 477