தமிழக மக்களுக்கு நல்லது செய்வது தான் முதல்பணி – விசயகாந்து
தமிழக மக்களுக்கு நல்லது செய்வது தான் முதல்பணி, விசயகாந்த்து முதலமைச்சராவது இரண்டாம்நிலைதான், என தே.மு.தி.க., தலைவர் விசயகாந்து தூத்துக்குடியில் பேசினார். வேலை வாய்ப்பு இல்லை: செல்வநாயகபுரம் சாலையில் ம.தி.மு.க., வேட்பாளர் சோயலை ஆதரித்து விசயகாந்த்து பேசியதாவது: தூத்துக்குடி தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு மீனவர்கள், கோவில்பட்டியில் தீப்பெட்டித்தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். ஆனால் இங்கு வேலை வாயப்பு இல்லாமல் தொழிலாளர்கள் வெளிமாநிலங்களுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் இல்லை: அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் இங்குள்ளது. தமிழகத்தின்…
வாக்கு யாருக்கு?
யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விட யாருக்கு வாக்களிக்கக்கூடாது என்பதன் அடிப்படையில்தான் தேர்தல் வெற்றிகள் அமைகின்றன. மக்கள் மனம் கொள்ளும் வகையில் எக்கட்சியின் பணியும் அமையாததால், விருப்பமின்றி, எதிர்நிலை அணுகுமுறையில் மக்கள் வாக்களிக்கின்றனர். சிலக் கட்சிகள் மீது நாட்டம் இருப்பினும் வாக்கு சிதறக்கூடாது என்று எண்ணியும் வெற்றிபெறும் என எதிர்நோக்கும் கட்சியில் வாக்களிக்க விரும்பியும், மக்கள் அளிக்கும் வாக்குகளே ஆட்சியை முடிவு செய்கின்றன. இப்பொழுது நடைபெற்று வரும் பொதுத்தேர்தலில் – தமிழ்நாட்டில் வரும் ஏப்பிரல் 24,2014 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ள…