அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்! – செயபாசுகரன்
தமிழ்ச் சான்றோர் பேரவை நிறுவனர் நா.அருணாசலம், வாழ்வின் விளிம்புக்குப் போனதையறிந்த தமிழ்ச்சுற்றங்கள், கவலையோடு அவர் இல்லத்தில் குழும… தேனிசை செல்லப்பா, புட்பவனம் குப்புசாமி போன்ற பாவாணர்கள், ஆனாரூனாவுக்குப் பிடித்த இன எழுச்சிப் பாடல்களை, அவர் காதுபடப் பாடினர். புட்பவனம், ஆனாரூனா அவர்களைப்பற்றி செயபாசுகரன் எழுதிய “தமிழ்மொழியின் வேரில் பாயும்’’ எனத்தொடங்கும் பாடலைத், தேம்பலுடன் பாடியபோது, அதைக் கேட்டபடியே ஆனாரூனா அவர்களின் இதயத் துடிப்பு கரைந்துவிட்டது. அப்பாடல் வருமாறு: அருணாசலம் புகழ் என்றும் உலகினில் வாழும்! தமிழ் மொழியின் வேரில் பாயும் தஞ்சை…