ஆண்டவர்கள் ஓய்வெடுக்கட்டும்! ஆண்டவன் கட்டளை இது!   தமிழ்நாட்டில் இதுவரை ஆண்ட கட்சிகள்,  நிறைகளும் குறைகளும் கொண்டவையே! இவ்வாறு இருப்பது இயற்கையே! குறிப்பாக இப்பொழுது  தேர்தல் களத்தில் உள்ள செயலலிதாவும் கலைஞர் கருணாநிதியும் பாராட்டத்தக்கப் பணிகளும் ஆற்றி உள்ளனர். ஆனால்,   அதே நேரம், வாயில் தமிழ் முழங்கிக்கொண்டே,  செயலில் தமிழை மறந்தவர்களாக, இருவரும் உள்ளனர். எதை எதையோ கட்டணமாகத் தர முடிபவர்களால் கல்வியையும் மருத்துவ வசதியையும் ஏன் இலவயமாகத் தர இயலவில்லை? பொருள்களைக் கட்டணமின்றித் தரும்பொழுது அவற்றின் கொள்முதலில் ஆதாயம் பார்க்க இயலும். கல்வியையும்…