தேர்தல் கணக்குகள் சரியே! விடைகள் தவறாகும். – இலக்குவனார் திருவள்ளுவன்
தேர்தல் கணக்குகள் சரியே! விடைகள் தவறாகும். கட்சிகள் எண்ணிக்கை குறைய வேண்டும். அவற்றின் முதற் கட்டமாகக் கூட்டணி அமைத்துப் போட்டியிட வேண்டும் என்று பேரா.சி.இலக்குவனார் கூறியுள்ளார். அவர் சொன்னது, ஓரளவேனும் ஒத்துப்போகும் கொள்கைகளின் அடிப்படையில் கூட்டணி அமைப்பது. ஆனால், செல்வ வளத்தைப் பெருக்க அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையிலேயே கூட்டணி அமைவதால் நாட்டு நலனுக்கு எதிராக அமைகிறது. தனித்துப் போட்டியிடுவதை விடக் கூட்டணி அமைப்பதால் சில வெற்றிகளையாவது சந்திக்கலாம்; தோல்வி யடைந்தாலும் கணிசமான வாக்குகளைப் பெறலாம் என்று கருதுவதாலேயே கட்சிகள் கூட்டணி…