தேர்தல் நடத்தை நெறிமீறல் குறித்து முறையீடு அளிக்க பகிரழைப்பி(வாட்சு-ஆப்) எண்!
தேர்தல் நடத்தை நெறிமீறல் குறித்து முறையீடு அளிக்க பகிரழைப்பி(வாட்சு-ஆப்) எண்! அறிவித்தது தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைத் தேர்தலில் நடத்தை நெறிமுறைகளை மீறி நடப்பவர் குறித்து முறையிட பகிரழைப்ப (வாட்சு-ஆப்) எண்களைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்துச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தத் தமிழகத் தேர்தல் ஆணையர் இராசேசு இலக்கானி, “தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் செயற்பாட்டில் உள்ளன. மாநிலம் முழுவதிலும் பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாக்குப் பொறிகளைச் சரி பார்க்கும் பணி 90% முடிந்து விட்டது. சட்டமன்றத்…