இரம்சான் நோன்பை முன்னிட்டு விளையாட்டுப்போட்டி – வைகை அனிசு

 தேவதானப்பட்டியில் முசுலிம்சமாஅத்து இளைஞர்கள் விளையாட்டுக்குழுவும் இந்திய நன்மதிப்பு முன்னணியும்(பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா) ஆண்டுதோறும் இரம்சான் பெருநாளை முன்னிட்டு விளையாட்டுப்போட்டி நடத்தி வருகின்றன.  தேவதானப்பட்டியில் உள்ள திப்பு சுல்தான் திடலில் சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டுப்போட்டி நடைபெற்றது. இதில் கம்பு விளையாட்டு, சடுகுடு போட்டி, இசைநாற்காலி, ஓட்டப்பந்தயம், பேச்சுப்போட்டி முதலான பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.   இந்நிகழ்ச்சிக்குப் பள்ளிவாசல் சமாஅத்துத் தலைவர் அப்துல் கபார்கான் தலைமை தாங்கிப் பரிசுகளை வழங்கினார். இவ்விளையாட்டுப்போட்டியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற மாணவ,…

தேவதானப்பட்டிப் பகுதியில் அடிக்கடி மின்தடை

  தேவதானப்பட்டிப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின்கருவிகள் பழுதாகும் பேரிடர்   தேவதானப்பட்டிப் பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மின்கருவிகள் பழுதாகும் பேரிடர் ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டிப் பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறையில் உள்ளது. இதில் கடந்த வாரம் முதல் 1 மணிநேரத்திற்கு ஒருமுறை மின்தடை ஏற்படுகிறது. இதனால் இப்பகுதியில் அவ்வப்பொழுது இயக்கப்படும் மின்கருவிகள்,  உழவர்களின் மின்னியந்திரங்கள் அடிக்கடி பழுதாகின்றன. மின்சாரம் நிறுத்தப்பட்டு மீண்டும் மின்சாரம் வரும்பொழுது அதிக மின்அழுத்தத்துடன் வருகிறது. இதனால் தொலைக்காட்சிப் பெட்டிகள், தண்கலன், மின்…

தேவதானப்பட்டிப் பகுதியில் குழு முறையில் வாடிக்கையாளர்கள் நகை விற்பனை

            தேவதானப்பட்டிப் பகுதியில் கூட்டு முறையில் வாடிக்கையாளர்களின் நகைகள் விற்பனை செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.   தேவதானப்பட்டிப் பகுதியில் தேசியமயமாக்கப்பட் வங்கிகள், தனியார் வங்கிகள் ஆகியவற்றில் உழவர்கள், பொதுமக்கள் தங்களுடைய அவசரத்தேவைக்காக நகையை அடைமானமாக வைத்து அதன் மூலம் பணம் பெறுகின்றனர். அவ்வாறு பணம் பெறும்பொழுது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வணிகக்கடன், வேளாண்கடன் எனப் பிரித்து வேளாண்கடனுக்குக் குறைந்த வட்டி எனவும் அதற்கு நகையை மீட்டுக்கொள்ள 18 மாதம் எனவும் வரைமுறை வைத்துள்ளது. அதற்குள் நகையைத் திருப்பாவிட்டால் நகை ஏலத்தில் விடப்படும் என்று அறிவிப்பு செய்வார்கள்….

ஊழல் வழக்கில் சிக்கியவர்கள் மீண்டும் பணியாற்றும் கொடுமை!

  தேவதானப்பட்டிப் பகுதியில் ஊழல் ஒழிப்புக் காவலரால் கைது செய்யப்பட்டவர்கள் வழக்கு முடியும் முன்பே, மீண்டும் அதே அலுவலகத்தில் பணிபுரியும் சட்ட முரணான நடைமுறை உள்ளது.   தேவதானப்பட்டி, தேனி மாவட்டத்தின் பிறபகுதிகளில் வருமான வரித்துறை, வணிக வரித்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, சமூக நலத்துறை எனப் பல அலுவலகங்களில் தங்களுடைய வேலைகள் சீக்கிரம் முடிக்கவேண்டும் எனச் சிலர் இடைத்தரகர்கள் மூலம் கொடுக்கவேண்டியவற்றைக் கொடுத்துத் தங்கள் வேலையைச் சீக்கிரம் முடிக்கின்றனர். சிலர் அதிகாரிகளை நேரடியாகச் சந்தித்துக் கையூட்டு கொடுத்துத் தங்களுக்கு வேண்டிய தொழிற்சாலை உரிமம், நிலுவைத்தொகை,…

தேவதானப்பட்டியில் பொதுவுடைமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

    தேவதானப்பட்டியில் தனியார் நிறுவனத்தைக் கண்டித்துப் பொதுவுடைமைக் கட்சியினர் சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் ஆர்ப்பாட்டம்   தேவதானப்பட்டியில் தனியார் நிறுவனத்தைக் கண்டித்துப் பொதுவுடைமைக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் இலாசர் இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.   திண்டுக்கலில் இருந்து குமுளி வரை இருவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தை ஆந்திராவைச்சேர்ந்த தனியார் நிறுவனம் ஏற்று நடத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதத்திற்கு முன்பு போதிய நிதியில்லாததால்…

தேவதானப்பட்டியில் போலி இணையத்தளம் மூலம் பெண்களை மிரட்டும் கும்பல்

  தேவதானப்பட்டிப் பகுதியில் போலி மின்னஞ்சல் மூலம் இணையத்தளம் தொடங்கிப் பெண்களை மிரட்டி வரும் குற்றக்கும்பல்(மாபியா) மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  தேவதானப்பட்டிப் பகுதியில் போலி மின்னஞ்சல் முகவரி உருவாக்கி அதன் மூலம் இணையத்தளம், முகநூல், பதிபேசி(வாட்சு-அப்) போன்றவற்றைத் தொடங்கிப் பெண்களையும், வணிகர்களையும் குற்றக்கும்பல் மிரட்டி வருவதால் பொதுமக்கள், பெண்கள் பாதிப்படைகின்றனர். ஏதாவது ஒரு பெயரில் போலியான பெயர் வைத்துக் குடும்பப் பெண்களையும், தொழில்அதிபர்களையும், கொச்சைப்படுத்தி எழுதி அதனைப் பதிபேசி மூலம் தகவல் பரப்பி அவமானப்படுத்துகின்றனர். அதன்பின்னர் அதனைக் காண்பித்துத்…

தேவதானப்பட்டிப் பகுதியில் நீர்நிலைகளில் குறைந்து வரும் நீர்மட்டம்

  தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள நீர்நிலைகளில் நிலத்தடி நீர்மட்டம் மளமளவெனச் சரிந்து வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.  தேவதானப்பட்டி, அதனைச் சுற்றியுள்ள ஊராட்சிகளில் பருவமழையாகப் பொழிந்த கோடைமழையானது பல ஆண்டுகளுக்குப் பின்னர் பொழிந்ததால் அப்பகுதிகளில் உள்ள கிணறுகள், ஏரிகள், நீர்நிலைகள் என அனைத்தும் நிரம்பி வந்தன. இந்நிலையில் அளவுக்கு அதிகமாகப் பெய்த கன மழையால் நீர்நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்தது. இருப்பினும் போதிய வாய்க்கால் அமைக்கப்படாதது, குளங்கள் கவர்வு(ஆக்கிரமிப்பு), குளத்தில் பரவலாக உள்ள கருவேல மரங்கள் இவற்றால் நீர்அதிக…

தேவதானப்பட்டியில் நீதிமன்ற வில்லையைப் பிய்த்து விற்போர்…

  தேவதானப்பட்டப் பகுதியில்    நீதிமன்றக்கட்டண வில்லையை விற்பனை செய்யும் ஊழியர்கள்   தேவதானப்பட்டிப் பகுதியில் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பபடும் மனுக்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அனுப்பும் மனுக்கள் முதலானவற்றில் ஒட்டப்படும் நீதிமன்றக்கட்டண வில்லைகளை எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள, ஊராட்சி, பேரூராட்சி, வட்டாட்சியர் அலுவலகம் போன்ற வருவாய்த்துறை அலுவலகங்களுக்கு மனுக்கள் செய்தால் 2 உரூபாய் மதிப்புள்ள நீதிமன்றக் கட்டண அஞ்சல்தலையும், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மனுக்கொடுத்தால் 10 உரூபாய்க்கான நீதிமன்றக் கட்டண அஞ்சல் தலையும் ஒட்டப்படவேண்டும்.  …

தேவதானப்பட்டியில் இரண்டாம் போகம்

தேவதானப்பட்டிப் பகுதியில் இரண்டாம் போகம் அறுவடைக்குத் தயாரான நிலங்கள்   தேவதானப்பட்டிப் பகுதியில் இரண்டாம் போகம் நெல் பயிரிடலுக்கு உழவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.   இப்பகுதியிலுள்ள நெல்வயல்கள். தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரம், பொம்மிநாயக்கன்பட்டி, செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் இரண்டாம் போக உழவுக்கு ஆயத்தமாகி தயாராகி வருகின்றன நெல்வயல்கள்.   தேவதானப்பட்டிப் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய மழை பொழியவில்லை. இதனால் நெல்வயல்கள் தரிசாகக் கிடந்தன. இந்நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்னால் பெய்த கனமழையால் இப்பகுதியில் உள்ள குளங்கள், கிணறுகள்,…

ஆளுங்கட்சியின் வன்முறைக்கு எதிராகக் காவல்நிலையம் முற்றுகை

ஆளும்கட்சியினர் வன்முறையைக் கண்டித்துப் பல்வேறு இடங்களில் சாலைமறியல்! காவல்நிலையம் முற்றுகை! பதற்றம்!   தேவதானப்பட்டிப் பகுதியில் விலையில்லா அரவை, கலவை, விசிறி, வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.   தேவதானப்பட்டியில் தொடக்கவேளாண்மைக் கூட்டுறவு வங்கி, காவல்நிலையம், பள்ளிவாசல் சமாஅத்து திருமண மண்டபம் முதலான பல இடங்களில் விலையில்லாப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. இதில் ஆளும் கட்சியைச்சேர்ந்தவர்களும், தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கி உறுப்பினர்களும் தங்களுடைய ஆளும்கட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டியவர்களுக்குக் கொடுப்பதற்காக, அடுத்தவர்களுக்குக் கொடுத்த விலையில்லா மின்னுரல், மின்னரவை, மின்விசிறி போன்றவற்றை…

தேவதானப்பட்டியில் மழையால் நெல் சேதம்

தேவதானப்பட்டிப் பகுதியில் திடீர் மழையால் பலஇலட்சம் உரூபாய் மதிப்புள்ள அறுவடை செய்த நெல் சேதம்    தேவதானப்பட்டிப் பகுதியில் திடீர் மழையால் பலஇலட்சம் உரூபாய் மதிப்புள்ள நெல்சேதமாகின. தேவதானப்பட்டியிலும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளான கெங்குவார்பட்டி, மலைச்சாலை,   கெ.கல்லுப்பட்டி, சில்வார்பட்டி முதலான ஊர்களிலும் முதல்போக நெல்   பயிரிட்டு அதனை அறுவடை செய்து வந்தனர். 75 அயிரைக்கல்(கிலோ) கொண்ட நெல் மூடை தற்பொழுது 900 முதல் 1000உரூபாய் வரை விற்பனை ஆனது. கடந்த சில வாரங்களாக அறுவடை செய்த நெல் அதிகமாக வந்ததால் நெல் மூட்டையின் விலை உரூ800…

தேவதானப்பட்டியில் தென்னை மரங்கள் கருகின!

தேவதானப்பட்டிப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை! இடிவிழுந்து தென்னை மரங்கள் கருகின!   தேவதானப்பட்டிப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பொழிந்தது. தேவதானப்பட்டிப் பகுதியில் கடந்த சில வாரங்களாகக் கோடை வெயில் வாட்டி எடுத்தது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்ல அவதிப்பட்டனர். இந்நிலையில் கடந்தவாரம் மாலை 5.00 மணியளவில் சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை பொழிந்தது. அதன் பின்னர் பயங்கரக் காற்று வீசியது. அக்காற்றால் ஆங்காங்கே உள்ள விளம்பரப் பதாகைகள், தற்காலிகப் பந்தல்கள், கோயில் விழாக்களுக்கு அமைக்கப்பட்ட பந்தல்கள் சாய்ந்தன.   இந்நிலையில்…