கலைமாமணி விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்துவது ஏன்? – இலக்குவனார் திருவள்ளுவன்
கலைமாமணி விருதுகள் வழங்குவதைக் காலங்கடத்துவது ஏன்? கலைகளைப் பேணவும் கலைஞர்களைப் போற்றி ஊக்கப்படுத்தவும் தமிழ்நாடு அரசு தரும் விருது ‘ கலைமாமணி’. இவ்விருதுகள் பிப்பிரவரி 2010 இற்குப் பின்பு வழங்கப் பெறவில்லை. விருதுகள் வழங்க அரசிற்குப் பரிந்துரைப்பதும் நடவடிக்கை முற்றுப்பெறாமல் போவதுமாகச் சிலமுறை நிகழ்ந்துள்ளன. கலைமாமணி விருதுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவ்வப்பொழுது செய்திகள் வரும். ஆனால் காற்றோடு கரைந்து போகும். நாட்டில் எத்தனையோ சிக்கல்கள் இருக்கும்பொழுது இதற்கெல்லாம் முதன்மை கொடுக்க வேண்டுமா என எண்ணலாம். ஆனால், நாட்டு வளர்ச்சியில் கலைவளர்ச்சியும் அடக்கம். கலைவளர்ச்சியில்…