உதவி கேட்கும் முன்னாள் போராளி அன்பரசன் என்னும் கிருபாகரன் செல்லத்துரை
அன்புடையீர் வணக்கம். அன்பரசன் என்னும் முன்னாள் போராளி எழுதியுள்ள மடலைப் படிக்கவும். இவர் 2016 மார்ச்சு மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார். மரத்தாலே விழுந்தவனை மாடேறி மிதித்தமாதிரி சென்ற கிழமை இவர் ஒரு நேர்ச்சியில்(வாகன விபத்தில்) சிக்கி யாழ்ப்பாணம் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மிதிவண்டியில் சென்றுகொண்டு இருந்த இவரை எதிரே வந்த ஊர்தி மோதியுள்ளது. சென்ற சனிக்கிழமை அவருக்கு அறுவை மருத்துவம் செய்யப்பட்டது. எனக்குக் காலும் கையும் இருக்கிறது நான் உழைத்து முன்னேறுவேன் எனச் சொல்லிவந்த அவருக்கு இந்த நேர்ச்சி/விபத்து இடியாக இறங்கியுள்ளது….