இராகுல் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
இராகுல் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வேண்டும்! பேச்சுமுறை, அணுகு முறை, பெரும் மாற்றத்திற்கான பயணம், கலந்துரையாடல்கள், செய்தியாளர் கூட்டம் முதலான பலவற்றில் இராகுலின் பங்கு சிறப்பாகவே உள்ளது. நரேந்திர(மோடியை) – அவரின் பா.ச.க. கட்சியைத் – தோற்கடிப்பதற்கு ஏற்றவராகவே அவர் திகழ்கிறார். மதவெறி பிடித்த, பொய்யிலே புரளும் பா.ச.க.வைத் தோற்கடிக்க மாநில முதன்மைக்கட்சிகள் ஒன்று சேரவில்லை. இந்தச் சூழலில் பா.ச.க. ஆட்சியை அகற்ற இராகுல் ஏற்றவராகவே உள்ளார். எனவே, அவர் தேர்தலில் போட்டியிடுவதும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் இடம்பெறுவதும் தேவையாக உள்ளது. அதே நேரம்…