தேர்தல் – நினைத்தனவும் நிகழ்ந்தனவும் – இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இதழின் சித்திரை 7, 2045 / ஏப்பிரல் 20, 2014 நாளிட்ட இதழுரையில் ‘வாக்கு யாருக்கு?’ என்னும் தலைப்பில் தமிழ் நேயர்களின் எண்ணங்களை எதிரொலித்திருந்தோம். தேர்தல் முடிவு வந்துவிட்டது. 16ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். நம் எண்ணங்களின் சுருக்கத்தையும் அவை நிறைவேறியுள்ளனவா என்பதையும் பார்ப்போம். 1.) காங்கிரசுக் கட்சி இந்தியா, முழுவதும் விரட்டி யடிக்கப்பட வேண்டும். .. காங்கிரசு அடியோடு தோற்கடிக்கப்படுவது பிறருக்கும் பாடமாக அமையும். இந்தியா முழுமையும் காங். பரவலாக மண்ணைக் கவ்வி 44 இடங்களில் மட்டுமே வெற்றி…