தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙி] – இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙா] 1.முன்னுரை – பிற்பகுதி தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙி] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடக்கம் பேராசிரியர் தந்தை மு.சிங்காரவேலர் பத்து மா நிலங்களும் கறவை மாடுகளும் உழவு மாடுகளும் மளிகைக்கடையும் உடைய செல்வத்தில் திளைத்தவரே. தாய் அ.இரத்தினம்மாள் நாட்டாண்மைப் பெருமை பெற்றிருந்த குடும்பத்தைச் சேர்ந்தவரே. இரு வாசல் இருப்பின் செல்வச் செழிப்பின் அடையாளமாகக் கருதப்பட்ட அக்காலத்தில் அத்தகைய இரு வாசல் உடைய மிகச் சில வீடுகளில் இவர்களின் வீடும் ஒன்று. என்ன இருந்து…