ஆங்கிலவழித் திணிப்புக்கு எதிராகத் தொடர் மறியல் போராட்டம்!
தமிழக அரசின் ஆங்கிலவழித் திணிப்புக்கு எதிராக ஆகத்து 3 முதல் 7 வரை தொடர் மறியல் போராட்டம்! சென்னை தலைமைச் செயலகம் – திருச்சி மாவட்ட ஆட்சியரகம் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவிப்பு தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், (ஆனி 17, 2046 / சூலை 02, 2015 அன்று) சென்னையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பெ.மணியரசன் தலைமையேற்றார். காந்தியப் பேரவைத் தலைவர் திரு. குமரி அனந்தன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர்…