மூளையே மூலதனம் – அறிவுநிதி விருது
– தன்னம்பிக்கைத் தொடர் நிகழ்ச்சி “2009 இல் ‘இலக்கு ‘ என்னும் பல்கலைப் பயிலரங்கம் நிறுவி ஓவியம், கையெழுத்து எனக் குழந்தைகளுக்கான வழக்கமான பயிற்சிகளுடன் நினைவாற்றல், தன்னம்பிக்கை ஆளுமைத் திறன், குமுகாயச் சிந்தனை ஆகிய பிரிவுகளிலும் கோடைக்கால முகாம்களை நடத்தினோம், தற்போது இதன் விரிவாக்கமாக வறுமை, இயலாமை, வழிகாட்டுதல் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் தடம் மாறும் இளைஞர்களுக்காக ‘மூளையே மூலதனம்‘ என்னும் பெயரில் ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு தலைப்புகளில் அறிவுசாரர் பெருமக்களின் எழுச்சியூட்டும் தன்னம்பிக்கை உரைவீச்சுகளுக்கு…