இறையன்பு செலுத்த அருகதையற்றோர் யார்? – சொ.வினைதீர்த்தான்
தொண்டரடிப்பொடியாழ்வார் இறையன்பு செலுத்த அருகதையற்றோர் யார் என்று அற்புதமாகப் பின்வரும் பாசுரத்தில் பதிவுசெய்து இறைப்பற்றின் நோக்கத்தை அழகுற உணர்த்திவிடுகிறார். “மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோர் இன்சொ லில்லை சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே.” மனத்தூய்மை வாய்மையால் காணப்படுமென்றது வள்ளுவம். மனத்தினில் தூய்மையில்லாமல் “நமநம” என்று பேசுவதாலும், தலங்கள்தோறும் அலைவதாலும், புறச்சின்னங்களாலும் அரங்கனின் அருள் கிடைத்துவிடாது. கள்ளநெஞ்சத்திற்குப் பற்று – பக்தி – வசப்படாது…