திருவாடானை: தொண்டி, நம்புதாளை கடற்கரையில், 500க்கும் மேற்பட்ட கடவுள் சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவை, பூப்பதனிடுதல் முறையில், முகலாயர்களிடம் இருந்து பாதுகாக்கப்பட்டவையா எனக் காவல்துறையினர்  ஆராய்ந்து வருகின்றனர்.இராமநாதபுரம், தொண்டி கடற்கரையில், 21.01.14 நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, இப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றவர்கள், அங்கே, சிறிய  கடவுள் சிலைகள் கிடப்பதைக் கண்டனர்.  அவர்கள், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சார்புஆய்வாளர் இந்திரா  முதலான காவலர்களும்  மீனவர்களும், கடலில் இறங்கி, மேலும் சிலைகள் இருக்கின்றனவா எனத் தேடினர். இதில்,கடவுள் மந்திர எழுத்து பொறித்த செப்புத்தகடுகள், படிகலிங்கம், பச்சை நி…