3,4 / 6 இளந்தமிழனுக்கு அன்பி னோடும் அறிவு சேர்ந்த ஆண்மை வேண்டும் நாட்டிலே; அச்ச மற்ற தூய வாழ்வின் ஆற்றல் வேண்டும் வீட்டிலே. இன்ப மான வார்த்தை பேசி ஏழை மக்கள் யாவரும் எம்மு டன்பிறந்த பேர்கள் என்ற எண்ணம் வேண்டும். துன்ப மான கோடி கோடி சூழ்ந்து விட்ட போதிலும் சோறு தின்ன மானம் விற்கும் துச்ச வாழ்வு தொட்டிடோம்! என்ப தான நீதி யாவும் இந்த நாட்டில் எங்கணும் இளந்த மிழா! என்றும் நின்றே ஏடெ டுத்துப் பாடுவாய்!       3  …