தொல்காப்பிய ஓவியப்போட்டி – மொத்தப் பரிசு உரூபாய் 25,000
தொல்காப்பிய ஓவியப்போட்டி – மொத்தப் பரிசு உரூபாய் 25,000 கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்பிக்காடு என்னும் ஊரில் தொல்காப்பியருக்குச் சிலை எழுப்பப்பட்டுள்ளது. அச்சிலையைச் சுற்றி எண்மாடக்கூடமும் உச்சித்தளமுமாக 9 தளங்கள் கொண்ட தொல்காப்பியர் கோபுரம் அமைக்கத்திட்டமிடப்பட்டுள்ளது. சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் கல்வெட்டுகளாகவும் தொல்காப்பியர், தொல்காப்பியம்பற்றிய செய்திகளும் தொல்காப்பிய விளக்கப் படங்களும் அமைய உள்ளன. எனவே, தொல்காப்பியர் குறிப்பிடும் அறிவியல் செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் மெய்ப்பாட்டுச்செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் அகத்திணைச் செய்திகள் தொல்காப்பியர் குறிப்பிடும் புறத்திணைச் செய்திகள் எனப் பல்வேறு கருத்துகளை விளக்கும் ஓவியங்கள் வரவேற்கப்படுகின்றன….