தொல்லிசையும் கல்லிசையும் ஆவணப்படம் – தொடக்கவிழா!
நாள்: தை 28, 2050, திங்கள் கிழமை, 11.02.2019 நேரம்: அந்திமாலை 6. 00 மணி – 8. 30 மணி; இடம்: செயராம் உணவகம், புதுச்சேரி அருந்தமிழ் உறவுடையீர், வணக்கம். தமிழை இயல், இசை, நாடகம் என மூவகைப்படுத்தி நம் முன்னோர் உரைப்பர். இவற்றுள் நடுவணாக உள்ள இசைத்தமிழ் நீண்ட வரலாறு கொண்டது. தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம், காரைக்கால் அம்மையார் பாடல்கள், திருமுறைகள், ஆழ்வார் பாசுரங்கள், சேக்கிழாரின் பெரியபுராணம், சீவக சிந்தாமணி, அருணகிரிநாதரின் பாடல்கள், அண்ணாமலை(ரெட்டி)யாரின் காவடிச்சிந்து, வண்ணச்சரபம் தண்டபாணி…