85. ஆளுநர் இரா.ந. இரவி 100 பட்டியலினத்தவருக்குப் பூணூல் அணிவித்ததைப் புரட்சியாகக் கூறுகிறாரே!
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 83. 84 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 85 பழைய நிகழ்வுகள் இரண்டைக் குறிப்பிட விரும்புகிறேன். பாரதியார் தனது சீடராகக் கருதிய தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இரா. கனகலிங்கம் என்பவருக்கு 1913 இல் பூணூல் அணிவித்திருக்கிறார். இதன் மூலம் அனைவரையும் சமமாக ஆக்கிவிட்டதாகவும் கனகலிங்கம் உயர்ந்து விட்டதாகவும் கருதினார். இதேபோல் புதுவை உப்பளம் சேரியில் உள்ள தேசமுத்துமாரி கோவில் அருச்சகரான சி. நாகலிங்கப் பண்டாரம் என்ற பட்டியலின இளைஞருக்கும் பாரதி பூணூல் போட்டு காயத்திரி மந்திரத்தைக் கூறியுள்ளார்….
தோழர் தியாகு எழுதுகிறார் : தொல். திருமாவுக்குத் திறந்த மடல்
(தோழர் தியாகு எழுதுகிறார் : பெரியகுளம் போராட்டக் களம்-தொடர்ச்சி) விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்குத் திறந்த மடல் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு. என் கனிவான வணக்கத்தையும் அன்பு நிறைந்த பிறந்தநாள் வாழ்த்தினையும் ஏற்க வேண்டுகிறேன். உங்களுக்கிருக்கும் கடுமையான நேர நெருக்கடிக்கிடையே எனக்காகச் சில நிமையம் ஒதுக்கி, இந்தச் சுருக்கமான மடலைப் படிக்க வேண்டுகிறேன். தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மாரிமுத்து-மகாலட்சுமி சாதியாணவக் கொலைக்கு நீதி கோரி நடந்து வரும் தொடர் போராட்டத்தில் சென்ற 17/08/2023இல் நடைபெற்ற…