செவ்வியல் இலக்கியங்களில் கலைச்சொல் மேலாண்மை 2 – இலக்குவனார் திருவள்ளுவன்
(ஆடி 17, 2046 / ஆக 02, 2015 தொடர்ச்சி) வினைப்பெயர், செய்யும் செயலைப் பொருத்தி அமையும் பெயர்கள். தச்சன், பொன் கொல்லன், கொல்லன் போன்ற பெயர்கள். உலகம் முழுவதும் மரவேலை செய்பவன் தச்சன்தான். ஆங்கிலத்தில் carpenter என்றழைக்கின்றோம். இது உலகம் முழுவதும் விளங்கும் புரியும் வினைப்பெயரே. பெயர்கள் பலவகைப்படும். இவற்றை ஒல்காப்புகழ் தொல்காப்பியர், நிலப்பெயர், குடிப்பெயர், குழுவின் பெயரே வினைப்பெயர், உடைப்பெயர், பண்பு கொள் பெயரே, பல்லோர் குறித்த முறைநிலைப் பெயரே பல்லோர் குறித்த சினை நிலைப் பெயரே பல்லோர் குறித்த…