செஞ்சீனா சென்றுவந்தேன் 5 – பொறி.க.அருணபாரதி
(ஆனி 29, 2045 / சூலை 13, 2014 இதழின் தொடர்ச்சி) 5. சீனப் பொருளியலின் “வளர்ச்சி” ஏற்றுமதிசார்ந்த உற்பத்தியைமட்டும் அதிகரிக்கும்நாடுதான், ‘வளர்ச்சி’ பெறும்நாடு என உலகமயப்பொருளியல் உருவாக்கியிருக்கும் கருத்து நிலையை, அப்படியே உள் வாங்கிக்கொண்டுவிட்டதுசீனப் பொதுவுடைமைக் கட்சி. இதன் விளைவாக, உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி அதன் உபரியைக் கொண்டு மக்கள்நலத் திட்டங்களைச் செயல்படுத்தவேண்டிய சீனப் “பொதுவுடைமை” அரசு, ஏற்றுமதிசார்ந்த உற்பத்தியிலும், அதன் ‘வளர்ச்சி’ விகிதத்திலும்தான் அதிகம் கவனம் செலுத்துகின்றது. உலகமயமாக்கலின் ஒரு பகுதியாக, 1991ஆம்ஆண்டு, நான் வந்திறங்கியுள்ள சியான்நகரில்…