மல்லாவியில் ஆய்வுக்கூடங்கள் திறப்பும் அமைச்சர் உரையும்

மல்லாவியில் ஆய்வுக்கூடங்கள் திறப்பும் அமைச்சர் உரையும்   “கடந்த காலங்களில் கல்விக்காக நிதி ஒதுக்கப்பட்டபொழுது அதில் பாகுபாடு காட்டப்பட்டது. பெரும்பான்மைக் கல்விக்கூடங்களுக்கு ஒரு மாதிரியாகவும் சிறுபான்மைக் கல்விக்கூடங்களுக்கு வேறு மாதிரியாகவும் நிதி பகிரப்பட்டது. ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. அனைத்துக் கல்விக்கூடங்களுக்கும் ஒரே அளவான நிதி ஒதுக்கப்படுகின்றது. அதற்காகத் தமிழ் அமைச்சர் ஒருவரும் பணியமர்த்தப்பட்டுள்ளார். எனவே, எமது கல்வியின் முன்னேற்றம் வெகு தொலைவில் இல்லை. இதனை எமது மாணவர்களும் ஆசிரியர்களும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” எனக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன்…

முல்லைத்தீவில் தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறப்பு

முல்லைத்தீவில்  தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் திறப்பு [கல்வி அமைச்சின் ஊடகப்பிரிவு]   முல்லைத்தீவு உடையார்கட்டு பெரும் கல்விக்கூடத்தின் (மகா வித்தியாலயத்தின்) தொழில்நுட்ப ஆய்வுக்கூடத்தைக் கல்வி அமைச்சர் வேலுசாமி இராதாகிருட்டிணன் ஆனி 02, 2047 / 16.06.2016 அன்று காலை திறந்து வைத்தார்.   இதன்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், சிவமோகன், சாந்தி சிறிகந்தராசா ஆகியோரும் கலந்து கொண்டனர். கல்விக்கூடத் தலைவர் வி.சிறீகரன் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன. விருந்தினர்கள் மாலை அணிவித்து அழைத்து வரப்படுவதையும் ஆய்வுக்கூடம் திறந்து வைக்கப்படுவதையும் கலந்து கொண்டவர்களையும் மாணவர்களுடன் அமைச்சர் கலந்துரையாடுவதையும் படங்களில்…