சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கோடைவிழா
சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கோடைவிழா அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! சப்பான் தமிழ்ச்சங்கத்தின் கலை – பண்பாட்டுத் துறையின் சார்பாக இந்த ஆண்டு கொண்டாட விழைந்திருக்கும் கோடைவிழா வரும் புரட்டாசி 16 / அக்டோபர் மாதம் 3ஆம் நாள் “வணக்கம் தமிழகம்” என்ற பெயரில் நடைபெறவிருக்கின்றது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தோக்கியோ மாநகரில் கொண்டாடப்படவுள்ள இவ்விழாவில் ஆடவர், பெண்டிர், குழந்தைகளுக்கான நமது பரம்பரை விளையாட்டுகள், கலைநிகழ்ச்சிகள் இடம்பெறவிருக்கின்றன. உடல்நலம் காக்கும் நம் தமிழர்களின் விளையாட்டுகளையும் ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்ற நம் பரம்பரை உணவு…