தோல்வி என்பது தோல்வி அல்ல! – ஈழன்

தோல்வி என்பது தோல்வி அல்ல வெற்றியின் எதிர்ச்சொல் மாத்திரமே! ஒவ்வொரு முறையும் உனக்கு வெற்றிதான் கிடைக்கவில்லை! அதன் பொருள் தோல்வியல்ல! நீ எவ்வாறு வெற்றி கொள்வது என்பதற்கான படிப்பினைகள் வெற்றிக்கான படிக்கட்டுகள்! அதிகம், அதிகம் நீ வெற்றிகளை தவறவிடுகிறாய் என்றால்……….. அதிகம், அதிகம் நீ வெற்றிகளை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறாய் என்று பொருள்! தோல்வி என்பது உனக்குள் நீ தோற்காதவரை உன்னோடு நீ தோற்காதவரை வெற்றிகளே! தோல்வி என்பது தோல்வி அல்ல வெற்றியின் மறைபொருள்களே! உன் முயற்சிக்கான வெற்றிகளே! உனக்குள் நீ தோற்காதவரை உன்னோடு நீ…

வாழ்த்திற்குரிய கலைஞரே! இனி என்ன செய்யப் போகிறீர்கள்?

    கலைஞர், வரலாற்றில் அருவினை பல  ஆற்றிய அருந்திறலாளர்! அவரது பகைவர்களும் அவரது உழைப்பை மதிக்கத் தவறுவதில்லை!  நூற்றுக்கு மேற்பட்ட நூல்களைப் படைத்தவர்;  மடல்களாகவும் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதித் தள்ளியவை மிகுதி. மொத்தத்தில் இருபதாயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதிக் குவித்த  படைப்பாளர்;  ஏறத்தாழ 75 திரைப்படங்களுக்குக் கதை உரையாடல் எழுதி உள்ளார்; நேற்றுவரை திரை உலகில் நுழைந்தவர்கள் அவர் எழுதிய திரையாடலைப் பேசி நடித்துக் காட்டித்தான் வாய்ப்பு பெற்றனர் என்பது  அழிக்க முடியாத வரலாறு; பன்னிரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை…

வெற்றி மாலை சூடியவர்களுக்கும் சூடப் போகிறவர்களுக்கும் வாழ்த்துகள்!

  12 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வந்துள்ளன. அடுத்து, 10 ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் வர உள்ளன. (இடையில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் வர உள்ளன.) இவற்றில்  வெற்றி பெற்றவர்களுக்கும் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் அடுத்து வெல்லலாம் என்ற நம்பிக்கை கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்! வெற்றி கண்டு மயங்காதீர்!   பத்தாம் வகுப்பில் முதலிடம் பெறுபவர்கள் அனைவரும் அவ்வாறே பன்னிரண்டாம் வகுப்பில் முதலிடம் பெறுகிறார்களா என்றால் இல்லை என்பதே நடைமுறை. இரண்டாண்டில் அவர்களின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் என்ன?  அதே போல், 12…