தோழர் தியாகு எழுதுகிறார் 9: புவித்தாய்க்குக் காய்ச்சல்!
(தோழர் தியாகு எழுதுகிறார் 8: கனவுத் திட்டங்கள் கதைத்தல் எளிது! தொடர்ச்சி) புவித்தாய்க்குக் காய்ச்சல்! சூழலரண் அறிக்கையில் தோழர் சமந்தா இப்படி எழுதுகிறார்: “காலப்போக்கில் மனித இனம் இயற்கையை மதிக்கவும் பாதுகாக்கவும் தவறியதாலும், நஞ்சையே விதைத்ததாலும் நம் புவித்தாய் காய்ச்சல் கொண்டிருக்கிறாள், இரண்டு நாளில் சரியாகும் சாதாரணக் காய்ச்சல் அல்ல இது. உயிரைப் போக்கும் நச்சுக் காய்ச்சலால் உயிர்க்கோளம் சின்னாபின்னமாக்கப்பட்டுள்ளது.” புவித் தாய்க்கு அவள் பெற்ற மக்களின் செயலாலேயே காய்ச்சல் கண்டுள்ளது! அதே மக்கள்தாம் அந்தக் காய்ச்சலைத் தணிக்கவும் கடமைப்பட்டவர்கள். அரசியல் நெருக்கடியையும் பொருளியல்…