மொசில்லாவின் பொது மூலக் குரல்தரவுதள அறிமுகக் கூட்டம்
மொசில்லாவின் பொது மூலக் குரல்தரவுதள அறிமுகக் கூட்டம் மொசில்லாவின் பொது மூலக் குரல்தரவுதள முன்னெடுப்பான ‘Common Voice ‘ (voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘Common Voice’ தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதன் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதன் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது. நாள்: புரட்டாசி 10,…
மின்னூல் உருவாக்குவது எப்படி? – உரை
இலயோலா கல்லூரித் தமிழ்த்துறையும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், இணைய உரை மின்னூல் உருவாக்குவது எப்படி? புரட்டாசி 08, 2052 24.09.2021 நண்பகல் 12.15 இணைப்பு – meet.google.com/qpd-mxzv-dzt தொடர்புக்கு – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com – 9841795468
கட்டற்ற கணியன்கள் (மென்பொருட்கள்) –அறிமுக உரை
பைஃபிரான் (PhyFron) குழுவும் கணியம் அறக்கட்டளையும் இணைந்து வழங்கும், இணைய உரை கட்டற்ற கணியன்கள் (மென்பொருட்கள்) –அறிமுகம் புரட்டாசி 08, 2052 வெள்ளி 24.09.2021 மாலை 5.30 – 7.00 அவசியம் இந்த இணைப்பில் முன்பதிவு செய்க – us02web.zoom.us/meeting/register/tZ0ldOGurzwuE9R_x1tq6W61EU7UBF4Yqd9a உங்கள் மின்னஞ்சலுக்கு நிகழ்வின் இணைப்பு அனுப்பப்படும். தொடர்புக்கு – த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com – 9841795468
கணியம் கட்டின்மை நாள் (Software Freedom Day) 2018, தாம்பரம்
உங்கள் கணிணியில் உள்ள கணியன்கள்(மென்பொருட்கள்) உங்களுடையவைதானா? கணியன்(மென்பொருட்)களை ஏன் பகிர வேண்டும்? உங்கள் கணிணிகளில் சிதைப்பியை(virus) நிலையாக ஒழிக்கலாமா? இலவசமாக, முழு உரிமைகளுடன் பல்லாயிரம் கணியன்(மென்பொருட்)கள் கிடைப்பது தெரியுமா? அறிவோம் வாருங்கள். கணியம் கட்டின்மை நாள் வைகாசி 10, 2049 / 27.10.2018 காலை 9.30 முதல் மாலை 4.30 வரை மெசு (MES) 1 ஆவது குறுக்குத் தெரு, கார்லி பள்ளி அருகில், கிழக்கு தாம்பரம், சென்னை – 600059 நிகழ்ச்சி நிரல் 10.00 – 11.00 – கட்டற்ற கணியன் –…
விக்கி நிரல் திருவிழா
விக்கி நிரல் திருவிழா வரும் ஞாயிறு ஆடி 07, 2048 ஞாயிறு சூலை 23, 2017 அன்று சென்னை (இ)லினக்சு பயனர் குழு நடத்தும் விக்கி நிரல் திருவிழாவில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம். இடம் திருவான்மியூர்(Hexolabs Interactive Tech Pvt Ltd, Type II/17, Dr.VSI Estate), சென்னை 41. தொலைபேசி – 044 42169699. நேரம் ஆடி 07, 2048 ஞாயிறு சூலை 23, 2017 காலை 10.00 முதல் மாலை 5.00 வரை. தொடர்புக்கும் முழு விவரத்திற்கும் த.சீனிவாசன் –…
தமிழுக்கான கட்டற்ற கணியங்கள்(மென்பொருட்கள்) – நிரல் திருவிழா
தமிழுக்கான கட்டற்ற கணியங்கள்(மென்பொருட்கள்) – நிரல் திருவிழா நீங்கள் கட்டற்ற கணியங்கள்(மென்பொருட்கள்) உருவாக்கத்தில் பங்கு பெற விரும்புகிறீர்களா? தமிழுக்கு உங்கள் நிரலாக்கத் திறன் மூலம் ஏதேனும் பங்களிக்க ஆர்வமுண்டா? பிற கட்டற்ற கணியம்(மென்பொருள்) பங்களிப்பாளர்களைச் சந்திக்க வேண்டுமா? இதோ ஒரு வாய்ப்பு. தமிழுக்கான கட்டற்ற கணியங்கள்(மென்பொருட்கள்) – நிரல் திருவிழா சித்திரை 10 / ஏப்பிரல் 23, 2017, ஞாயிறு காலை 10.00 – மாலை 5.00 மணவை முத்தபா நினைவகம், அறிவியல் தமிழாய்வு அரங்கு,ஏ.ஈ. 103, 6ஆேவது தெரு, 10-ஆவது முதன்மைச் சாலை,…
மின்னூல் பதிவிறக்க – து.நித்யாவின் எளியதமிழில் ‘சிஎசுஎசு’
விழுத்தொடர் பாணித் தாள்கள்(Cascading Style Sheets -CSS) இணையப் பக்கங்களை அழகாக வடிவமைக்கும் ஒரு நுட்பம். கணிணிக்கேற்ற வலை வடிவமைப்போடு கைபேசிக் கருவிகளுக்கான வலைத்தளங்கள், செயலிகள் உருவாக்கத்திலும் வி.பா.தா.(சி.எசு.எசு.) பெரும்பங்கு வகிக்கிறது. இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது. ஆசிரியர் : து.நித்யா மின்னஞ்சல்: nithyadurai87@gmail.com வலைப் பதிவு: http://nithyashrinivasan.wordpress.com தமிழில் கட்டற்ற கணியன்கள்பற்றிய தகவல்களைக் “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது. இதில் வெளியான CSS பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழுப் புத்தகமாக…