“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) – ஙீ
(ஆவணி 22, 2045 / செப்.07 ,2014 தொடர்ச்சி) தீர்மானம் – 5: கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும்! 1974-இல், சிங்கள இனவாத அரசோடு தனக்குள்ள உடன்வயிற்றுஉறவை வலுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காக இந்திய அரசு, தமிழகத்தின் சொத்தாகிய கச்சத்தீவைஇலங்கைக்குத் தானமாகக் கொடுத்தது. அதனால், தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். இதுவரைசிங்கள இனவெறி அரசு சற்றொப்ப 600 தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்றுள்ளது.இதற்குப் பின்னரும், இந்திய அரசு தனதுதவற்றைத் திருத்திக் கொள்ளாமல் மேலும்தீவிரத்துடன் கச்சத்தீவு இந்திய எல்லைக்குள் ஒருபோதும் இருந்ததில்லை என்றுஉச்சநீதிமன்றத்திலும்,…
“தமிழ்த் தேசியப் பேரியக்கம்” – தீர்மானங்கள் (தொடர்ச்சி) – ஙி
(ஆவணி 15, 2045 / ஆக.31,2014 தொடர்ச்சி) தீர்மானம் – 3:காவிரி மேலாண்மை வாரியம்உடனடியாக அமைக்க வேண்டும்! தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் பாசன நீராகவும், 19 மாவட்டங்களில்குடிநீராகவும் பயன்பட்டுத் தமிழ்த் தேசிய ஆறாக விளங்குகிறது காவிரி. காவிரித்தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புப்படி, 192 ஆ.மி.க. (டி.எம்.சி.) நீரைகருநாடகம் தமிழகத்திற்குத் திறந்து விட வேண்டும். ஆனால், கருநாடகம்தமிழகத்திற்குரியத் தண்ணீரைத் திறந்துவிடாமல், திருட்டுத் தனமாக கருநாடகஅணைகளில் தேக்கி வைத்துக் கொள்கிறது. கருநாடகத்தின் இந்தத் திருட்டுத்தனத்தைத் தடுத்து, இறுதித் தீர்ப்பைத்தவறாமல் செயல்படுத்துவதற்காகத் தீர்ப்பாயம் கூறிய தீர்வு தான் ‘காவிரிமேலாண்மை…
“தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி” – இனித் “தமிழ்த் தேசியப் பேரியக்கம்”
திருச்சி ஏழாவது சிறப்புப் பொதுக்குழுவில் ஒருமனமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம், ஆகத்து 15, 16 நாட்களில் திருச்சி, இரவி சிற்றரங்கில் நிறுவப்பட்ட பாவலர்மு.வ.பரணர் அரங்கில் நடைபெற்றது. ஆகத்து 15 – வெள்ளி அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்ற இச்சிறப்புப் பொதுக்குழுவை, தலைமைச் செயற்குழுஉறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் மேரி, சென்னை,தாம்பரம் தோழர் இரா.இளங்குமரன் ஆகியோரைக் கொண்ட தலைமைக்குழுவழிநடத்தியது. தலைவர் தோழர் பெ.மணியரசன், பொதுச் செயலாளர் தோழர்கி.வெங்கட்ராமன்…
சமற்கிருத எதிர்ப்புத் தெருமுனைக்கூட்டம், சென்னை
ஆடி 25, 2045 – 10.08.2014
காவிரி மேலாண்மை வாரியம் கோரி தமிழகமெங்கும் நடைபெற்ற போராட்டங்கள்!
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டுமென வலியுறுத்தி இன்று (ஆடி 5, 2045 -21.07.2014), காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் காவிரிப் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் இயங்கும் இந்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டமும், சென்னை முதலான பிற மாவட்டங்களில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகள் பங்கேற்புடன் கண்டன ஆர்ப்பாட்டங்களும் எழுச்சியுடன் நடைபெற்றன. தஞ்சை மாவட்டத்தில் வணிகர்களின் ஆதரவோடு முழுமையான கடையடைப்பு நடைபெற்றது. தஞ்சை தஞ்சையில், மருத்துவக் கல்லூரி சாலை – பாலாசி நகரில் இயங்கும் இந்திய அரசின்…
சமற்கிருத வாரம் கொண்டாடுவது அப்பட்டமான மொழித் திணிப்பு – இன மேலாதிக்கம்!
மத்திய அரசின் பள்ளிகளில் சமற்கிருத வாரம் கொண்டாடுவது அப்பட்டமான மொழித் திணிப்பு – இன மேலாதிக்கம்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கண்டனம்! நடுவண் மேல் நிலைப் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) இயக்குநர் அண்மையில் இந்தியா முழுதும் உள்ள நடுவண் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வரும் ஆகசுட்டு 7 முதல் 13 முடிய சமற்கிருத வாரம் கொண்டாடும்படி அறிவுறுத்தி இருக்கிறார். இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையானது ஒரு மொழி மற்றும்…
குடந்தை த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!
குடந்தை மலையாள ஆலூக்காசு வழக்கு: குடந்தை த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை! முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்து, கேரளாவில் தமிழர்களைத் தாக்கிய மலையாளிகளுக்கு எதிரடி கொடுக்கும்வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு திசம்பர் மாதம், தமிழகமெங்கும் மலையாள நிறுவனங்களை முற்றுகையிட்டு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் நடத்தியது. அதன் ஒரு பகுதியாக, தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் (கார்த்திகை, 2045 /07-11-2011 அன்று) நடைபெற்ற மலையாள நிறுவனம் சோசு ஆலுக்காசு மறியல் போராட்டத்தின் போது, அக்கடை அடித்து நொறுக்கப்பட்டதாக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச்…