இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 08– சி.இலக்குவனார்
[இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 07 தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 08– சி.இலக்குவனார் நகரங்கள் நாட்டுக்கு அணிகலன்கள் நகரங்களே. நகரங்கள் ஒரே நாளில் தோன்றிவிடா. விளைபொருள் மிகுதியாலும் கைத்தொழிற் சிறப்பாலும் கோயில்கள் அமைவதாலும் கப்பல் போக்குவரத்துக்குரிய வசதியாலும் வாணிபப் பெருக்காலும் தலைநகராகும் பேறு உண்டாவதனாலும் சிற்றூர்கள் பேரூர்களாக வளர்ச்சி பெற்று நகரங்கள் என அழைக்கப்பெறும். வளங்கொழிக்கும் பெரிய மாளிகையைக் குறிக்கும் ‘நகர்’ என்னும் சொல்லும் ‘நகரம்’ என்பதன் அடியாகும். ‘நகரம்’ என்பது எவ்வாறு இருக்கும் என்பதை…