திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும் : புதுமை விளக்கம் தரும் ஒரு புதிய முயற்சி – முகிலை இராசபாண்டியன்
‘திருக்குறள் முழக்கமும் நகைச்சுவை விளக்கமும்’ – புதுமை விளக்கம் தரும் ஒரு புதிய முயற்சி ஆய்வுரை இந்தியப் பொதுநூலாகத் திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்னும் கோரிக்கை இந்திய அரசிடம் தொடர்ந்து எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகப் பொதுநூலாகத் திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்னும் கோரிக்கையும் தற்போது எழுந்து கொண்டி ருக்கின்றது. ஈராயிரம் ஆண்டுகள் கடந்த பிறகும் இன்று புதிதாய்ப் பிறந்தது போன்ற தன்மையுடன் எல்லாருக்குமான அறிவியல் கருத்துகளை அள்ளித் தரும் பெருமை கொண்ட திருக்குறள் உலகப் பொதுநூலாக அறிவிக்கப்படும் காலம் வரும் என்பதற்கு இந்த…