‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’: அணிந்துரை: பழ.நெடுமாறன்
‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’ : அணிந்துரை: பழ.நெடுமாறன் புலவர் சா.பன்னீர்செல்வம் அவர்கள் ‘தமிழ் ஆய்வு – சில மயக்கங்கள்’ என்னும் தலைப்பில் தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றைக் குறித்து எழுதிய 10 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. தொல்காப்பியர் கூறிய திசைச் சொல் என்பதின் சரியான விளக்கம் யாது என்பதைச் ‘செந்தமிழா கொடுந்தமிழா?‘ என்னும் தலைப்பிலான கட்டுரை கூறுகிறது. செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப் பினவே திசைச்சொற் கிளவி எனத் தொல்காப்பியர் கூறுவதற்கு இளம்பூரணர், “செந்தமிழ்…