தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டன – இராசேசு இலக்கானி
தலைமைத் தேர்தல் ஆணையர் நசிம் சைதி, தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல் நாளை அதிகாரப்பூர்மாக அறிவித்தார். இதன் தொடர்ச்சியாகத் தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் இராசேசு இலக்கானி தேர்தல் நடத்தைவிதிகள் நடைமுறைக்கு வந்துவிட்டன எனக்கூறிப் பின்வருமாறு தெரிவித்தார்: தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதுமே, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டன *தேர்தல் பரப்புரை ஆற்றுவோர், வெவ்வேறு சாதி, சமயம், மொழி அல்லது சமுதாயத்தினருக்கு இடையே, இப்போதுள்ள கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்தும், ஒருவருக்கொருவர் வெறுப்புணர்வை ஏற்படுத்தும்…