(தோழர் தியாகு எழுதுகிறார் 251 : மீண்டும் வெண்மணி! – தொடர்ச்சி) பெரியகுளத்தில் நடப்பது என்ன? இனிய அன்பர்களே! சென்ற 2023 ஆகத்து 5 சனிக் கிழமை காலை 7 மணியளவில் தேனி மாவட்டம் பெரியகுளம் கும்பக்கரை சாலையில் ஒரு மாந்தோப்பில் மாரிமுத்து – மகாலட்சுமி இருவரும் தூக்கில் தொங்கும் சடலங்களாகக் கண்டெடுக்கபட்டதும், இது கொலையா? தற்கொலையா? என்ற கேள்வியுடன் நீதிக்கான போராட்டம் தொடர்வதும் தாழி அன்பர்கள் அறிந்த செய்திகளே. மாரிமுத்து வாழ்ந்து வந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் காவல்துறையின் நீதிமறுப்பைக் கண்டித்து அவரவர்…