தேவகோட்டை, மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியில்ஊர்தி
தேவகோட்டை – தேவகோட்டை பெருந்தலைவர் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் அறிவியல் ஊர்தி மூலம் செயல் முறை விளக்கமளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார். பள்ளித் தலைமை ஆசிரியர் இலெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அகத்தியா அறக்கட்டளையும் அமுமு அறக்கட்டளையும் இணைந்து நடத்தும் அறிவியல் ஊர்தி யில் துணைக்கருவிகளைக் கொண்டு அறிவியல் சார்ந்த விளக்கங்களை நேரடி ஆய்வு மூலம் சென்னையைச் சார்ந்த பயிற்சியாளர் கவியரசு செய்து காண்பித்தார். வளிமண்டலக் காற்று, காற்றின் அழுத்தம், காற்றின்…