நடுகற்கள் – இரண்டு நாள் தேசியக் கருத்தரங்கம்
தென்னிந்தியவின் சமூக வரலாற்றை அறிய உதவுபவை நடுகற்கள். 1974ஆம் ஆண்டு தமிழக அரசின் தொல்லியல் துறை முதலாவது நடுகற்கள் பற்றிய கருத்தரங்கை, சென்னையில் நடத்தியது. நாற்பதாண்டுகளில் சங்கக்கால நடுகற்கள் முதலான மிக முதன்மையான நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதோடு விரிவான ஆழமான ஆய்வுகளும் பலநிலைகளில் ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றை அறிய வேண்டி வருகின்ற சூன் மாதம் 21, 22 ஆகிய நாள்களில், இக்கருத்தரங்கை, கிருட்டிணகிரி வரலாற்று ஆய்வு மையம், தருமபுரி அதியமான் சமூக வரலாற்று ஆய்வு மையம், காவேரிப்பட்டினம் பெண்ணையாறு தொல்லியல் சங்கம் ஆகிய வரலாற்று…