தேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம் தேடாமல் கடமையாற்றட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையம் மலிவான விளம்பரம்  தேடாமல் கடமையாற்றட்டும்!  தேர்தல் ஆணையம் எப்படிப் பணியாற்றினாலும் ஒவ்வொரு தரப்பாரும் அவரவர் கண்ணோட்டத்தில் குறை கூறத்தான் செய்வர். என்றாலும் தேர்தல் ஆணையத்தில் பணியாற்றுவோர் மனச்சான்றுடன் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையரின்  அறிவிப்புகளைப் பார்க்கும் பொழுது மலிவான விளம்பரத்தில் காட்டும் நாட்டத்தை உரிய கடமையாற்றுவதில் காட்டவில்லை என்றுதான் தெரிகின்றது.   எடுத்துக்காட்டிற்கு ஒன்று:-   தேர்தல் ஆணையம் அவ்வப்பொழுது ஊர்திகளை மடக்கிப் பணங்களைப் பறிமுதல் செய்வதாகச் செய்திகள் வருகின்றன. ஆனால், தேர்தல் ஆணையரின் அறிவிப்பின்படி, இவ்வாறு கைப்பற்றப்பட்ட பணத்தில்…

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 013. அடக்கம் உடைமை

(அதிகாரம் 012. நடுவு நிலைமை தொடர்ச்சி) 01.அறத்துப் பால்                   02.இல்லற இயல்                 அதிகாரம் 013. அடக்கம் உடைமை      ஐந்து புலன்களையும் அடக்கி,    முந்து நல்வழியில் நடத்தல்.   அடக்கம், அமர்அருள் உய்க்கும்; அடங்காமை,      ஆர்இருள் உய்த்து விடும்.          அடக்கம், அருளுக்குள் அமர்த்தும்;        அடங்காமை, இருளுக்குள் செலுத்தும்.   காக்க பொருளாக, அடக்கத்தை; ஆக்கம்,      அதனின்ஊங்(கு) இல்லை உயிர்க்கு.          உயிருக்கும், நலந்தரும் அடக்கத்தை,        உயரிய பொருளாய்க் காக்க….

திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 012. நடுவு நிலைமை

(அதிகாரம் 011. செய்ந்நன்றி அறிதல் தொடர்ச்சி) 01. அறத்துப் பால் 02. இல்லற இயல்  அதிகாரம் 012. நடுவு நிலைமை     யாருடைய பக்கமும் சாயாமல்,    நேர்மையாக நடக்கும் சமநிலை.   தகுதி எனஒன்று நன்றே, பகுதியால்,    பால்பட்[டு] ஒழுகப் பெறின்.             அவ்அப் பகுதியார்க்கு ஏற்ப           நடக்கும் தகுதியே நடுநிலைமை.   செப்பம் உடையவன் ஆக்கம், சிதை(வு)இன்றி,     எச்சதிற்(கு) ஏமாப்(பு) உடைத்து.          நடுநிலையார் வளநலம் வழிவழி        வருவார்க்கும், பாதுகாப்பு…