நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்து! – இலக்குவனார் திருவள்ளுவன்
நடைமுறைப்புத்தாண்டில் நல்லன நடக்கட்டும்! நானிலம் சிறக்கட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்
நடைமுறைப்புத்தாண்டில் நல்லன நடக்கட்டும்! நானிலம் சிறக்கட்டும்! 2017 ஆம் ஆண்டுப் பிறப்பிற்கு அனைத்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நடைமுறைப் புத்தாண்டு வாழ்த்துகள்! தமிழ்நாட்டில் புதிய அரசு மலர்ந்துள்ளது! ஆளுங்கட்சியிலும் புதிய தலைமை மலர்ந்துள்ளது! எதிர்க்கட்சியிலும் புதிய தலைமை மலர உள்ளதாகக் கூறப்படுகிறது! இவற்றால் தமிழ்நாட்டில் புதிய மலர்ச்சி ஏற்படட்டும்! பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து (திருவள்ளுவர், திருக்குறள் 738) என்பதற்கேற்பப் பசிப்பிணியும் பிற நோயும்…