நடைமுறை ஆண்டும் தமிழ் ஆண்டுப் பகுப்பின் சிறப்பும் – இலக்குவனார் திருவள்ளுவன்
நடைமுறை ஆண்டும் தமிழ் ஆண்டுப் பகுப்பின் சிறப்பும் சனவரி முதல் நாளன்று நாம் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்கிறோம். ஆனால் நாம் எண்ணுவதுபோல் இஃது ஆங்கில ஆண்டுமல்ல, கிறித்துவ ஆண்டுமல்ல. நடைமுறையில் இவ்வாண்டு பயன் பாட்டில் உள்ளமையால் இதனை நாம் நடைமுறை ஆண்டு என்று சொல்லலாம். கிறித்துப் பிறப்பின் பொழுதே நடைமுறையில் இருந்த ஆண்டைக் கிறித்துவ ஆண்டு என்று சொல்வது தவறாகும். எனினும் வரலாறு அறிந்தவர்களும் அவ்வாறுதான் கூறுகின்றனர். கிறித்து பிறந்த பொழுது ஐரோப்பிய நாடுகளில் ஆண்டிற்குப் பத்து மாதங்கள்தாம் இருந்தன. அப்பொழுது சூலையும் ஆகத்தும் கிடையாது. கி.மு.45இல் உரோமானியப் பேரரசர் சூலியசு சீசரால் உருவாக்கப்பட்டு அவர் பெயரால் சூலியன் நாட்காட்டி (Julian calendar) என்றுஅழைக்கப் பெற்றதே முன்பு பயன்பாட்டில் இருந்தது. அலோசியசு இலிலியசு [Aloysius Lilius (1510 – 1576)] என்னும் இத்தாலிய மருத்துவர், வானியல் அறிஞர், மெய்யியலாளர், காலக்கணிப்பர் எனப் பல்துறை வித்தகராய் விளங்கினார். இவர் உலுயிகி இலிலியோ(Luigi Lilio) என்றும் உலுயிகி கிகிலியோ(Luigi Giglio) என்றும் அழைக்கப்படுவார். இவரால் மாற்றி யமைக்கப்பட்ட வடிவமே சில திருத்தங்களுடன் இப்பொழுது வழக்கில் உள்ளது….
நடைமுறைப் புத்தாண்டில் நனிசிறந்து வாழியவே! – இலக்குவனார் திருவள்ளுவன்
எல்லா நாளும் ஒரு நாளே! இன்பமும் துன்பமும் வரு நாளே! இன்பம் வந்தால் மயங்கா தீர்! துன்பம் கண்டால் துவளா தீர்! பிறர் துன்பம் நீங்க உதவிடு வீர்! அவர்இன்பம் காண முயன்றிடு வீர்! மொழிச் சிதைப்பரை ஒதுக்கிடு வீர்! இனக்கொலைஞரை ஒழித்திடு வீர்! சாதிக் கொலைகள் இல்லாத சமயச் சண்டை மறைந்திட்ட ஏழ்மை எங்கும் காணாத நன்னாள்தானே எந்நாளும்! நாளும் மாறும் நாளில் இல்லை, உயர்வும் புகழும் வாழும் முறையும்! அல்லன நீக்கி நல்லன எண்ணில் ஒவ்வொரு நாளும் புது நாளே! இலக்குவனார்…