(அதிகாரம் 079. நட்பு தொடர்ச்சி) 02. பொருள் இயல் 11. நட்பு இயல்      அதிகாரம் 080. நட்பு ஆராய்தல் வாழ்க்கை முழுதும் கூடவரும் ஆழ்நட்பை, ஆராய்ந்து ஏற்றல்.   நாடாது நட்டலின் கே(டு)இல்லை; நட்டபின்,        வீ(டு)இல்லை, நட்(பு)ஆள் பவர்க்கு.          ஆராயா, நட்பு கேடு; ஏன்எனில்,          நட்புக்குப்பின் விடுபடல் கடினம்.   ஆய்ந்(து)ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை, கடைமுறை,     தான்சாம் துயரம் தரும்.            ஆய்ந்துஆய்ந்து கொள்ளாதான் நட்பு,          இறுதியில் சாவுத் துன்பம்தான்.  …