வேம்பு நனை ஈர்ங்கண்     வேம்பு நனை ஈர்ங்கண் அலவன் ஆர்ப்ப தூம்பு கொள் நறவின் மணிச்சிறைத்  தும்பி அயல் சினை சேக்கும் அரிமணற் சேர்ப்ப! ஓங்கு பூ வேழத்து உளை அலரி செறித்த விரி இமைப் பூமயிர் அவள் உண்கண் வீழ்ந்து மல்லல் களிற்று மருப்பு மாய்ந்தன்ன புண்பட்டனை என்னை.அறிகுவை இஃது அவள் பால் பட்ட காதல் மாத்திறம் . அறிகுவை!அறிகுவை! மற்று எற்றுக்கு நின் வெண்முத்துக்குடையும் ஆனை நிரையும்? அவள் விழிநாடு வெல்லுதல் இயலுமோ வளை நரல் பௌவம் கலன்…